மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமிற்கு மாவட்டம் முழுவதும் அஞ்சலி!
பெரம்பலூரில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் முன்னாள் குடியரசு தலைவரும், விஞ்ஞானியுமான அப்துல்கலாம் மறைவுக்கு, பெரம்பலூர் உள்ள பல்வேறு அமைப்புகள் சார்பில் அமைதிப் பேரணி மற்றும் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இன்று மாவட்டத்தின் பலப்பகுதிகளில் நடைபெற்றது.
பெரம்பலூர் பிரஸ் கிளப் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள செய்தியாளர்கள் அறையில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் உருவப் பட்திற்கு மாலை அணிவித்து செய்தியாளர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். முன்னதாக மவுன அஞ்சலியும் செலுத்தினர். பெரம்பலூர் பிரஸ் கிளப் தலைவர் குருராஜ், செயலாளர் சிவானந்தம், பொருளாளர் வேலுசாமி, மற்றும் கிளப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். செய்தியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. வேப்பந்தட்டை சமூகப் பாதுகாப்புத்திட்ட வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட இளைர்கள் பங்கேற்று மலரஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, வட்டாட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து காமராஜர் வளைவு, சங்குப்பேட்டை, பாலக்கரை, புறநகர் பேருந்து நிலையம் வழியாக சென்ற அமைதி பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் நிறைவடைந்தது. இதில், மக்கள் சிந்தனைப் பேரவை மாவட்டச் செயலர் ஆ. துரைசாமி, ஒருங்கிணைப்பாளர் மாதேஸ்வரன், துணை்தலைவர் எம்.எஸ். மணிவண்ணன், உறுப்பினர்கள் மகேஸ்குமரன், தி. சத்யா, விஜி, கௌதமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அரசியல் கட்சிகளான பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மறைந்த அப்துல்கலாமிற்கு அஞ்சலி செலுத்தினர்.
பெரம்பலூர் கிறிஸ்டியன் கல்வி நிறுவனங்களின் சார்பில் அப்துல்கலாமின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் நிறுவன தலைவர் கிறிஸ்டோபர் அப்துல்கலாமின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் செயலாளர் மித்ரா, துறை தலைவர் கார்மேகம், முதல்வர்கள் சந்தோரதையம், சுகந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் சார்பில், தாளாளர் அ. சீனிவாசன் தலைமையில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், செயலார் பி. நீல்ராஜ், துணைத் தலைவர் சீ. கதிரவன், இயக்குநர்கள் பி. மணி, பி. பூபதி, நிர்வாக அலுவலர் ஆர். ராஜசேகர், கல்லூரி முதல்வர்கள் எஸ்.எச். அப்ரோஸ், சுகுமாரன், இளங்கோ, இளங்கோவன் உள்பட பலர் பங்கேற்றனர்.
பெரம்பலூர் ஸ்ரீசாரதா மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம். சிவசுப்பிரமணியம் தலைமையில், செயலர் எம்.எஸ். விவேகானந்தன், ஸ்ரீசாரதா மகளிர் கல்லூரி முதல்வர் கண்ணகி மற்றும் மாணவ, மாணவிகள் அப்துல் கலாம் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதே போன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொறியாளர்கள் சங்கம், மாணவர் அமைப்புகள், தொழிற் சங்கள், வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள், துக்கம் அனுசரிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அரசு ஊழியர்கள், காவலர்கள் தங்களது பங்கிற்கு கருப்பு பட்டை அணிந்து துக்கத்தை தெரிவித்து அஞ்சலி செலுத்தினர்.
உயர்வை நினைக் கலாம்
நினைத்ததை சாதிக் கலாம்
நல்லதை சிந்திக் கலாம்
சிந்தனையால் சிறக் கலாம் முதியோர்களை மதிக் கலாம் இளைஞர்களை வளர்க் கலாம் இந்தியாவை வல்லரசாக் கலாம் என்ற கனவை நனவாக் கலாம் என்று
முழங்கிய நமதருமை கலாம்
இன்னும் பல காலம்
நம்முடன் இருந்திருக் கலாம்
இறைவன் கருணை செய்திருக் கலாம்
வாட்ஸ் அப்பில் வெளியான கவிதையில் ஒன்று….