பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், மங்கலமேடு பகுதியில், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூரை சேர்ந்த தனியார் கல்லூரி பேருந்து, இன்று மாலை 3 மணியளவில், பெரம்பலூரில் இருந்து கடலூர் மாவட்டம் தொழுதூருக்கு 50 க்கும் மேறப்பட்ட மாணவர்களுடன் சென்று கொண்டிருந்தது.
பேருந்து அப்போது, மங்களமேடு அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென கன்றுக்குட்டி ஒன்று சாலையை கடந்தது. இதனால் பதட்டமடைந்த கல்லூரி பேருந்து ஓட்டுநர் பரமசிவம் தீடீரென பிரேக் பிடித்துள்ளார். ஓட்டுநரின், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் அருகே உள்ள பள்ளத்தில இறங்கி விபத்துக்குள்ளானது.
இதில், பேருந்தில் பயணித்த கர்ப்பினி மாணவிகளான கடலூர் மாவட்டம் தொழுதூர் அருகே உள்ள அரியநாச்சி கிராமத்தை சேர்ந்த கலையரசி (19), ஆவட்டி கிராமத்தை சேர்ந்த திவ்யா(18) மற்றும் சுந்தரி(18), உதயநிதி(19), மகேஷ்வரி(18), மீனா(19), ரஞ்சிதம்(18), செல்வி(18), திவ்யா(18) உட்பட 10க்கும் மேற்ப்பட்ட மாணவியர்கள் காயமடைந்து அலறினர்.
அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்த பொது மக்கள் ஓடிவந்து விபத்தில் காயமுற்ற மாணவியர்களை மீட்டு 108ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மாணவியர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து ஓட்டுநர் பரமசிவத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.