திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து, விஷமிகள் திட்டமிட்டு பரப்பும் எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருக்கிறார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், திமுக தலைவர் கருணாநிதிக்கு, அளிக்கப்பட்டு வரும் தொடர் சிகிச்சையின் விளைவாக உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக கூறியிருக்கிறார்.எனவே, விஷமிகள் திட்டமிட்டுப் பரப்பும் எந்த வதந்திகளுக்கும் செவி மடுக்க வேண்டாம் என்றுதிமுக தலைமை சார்பில் கேட்டுக்கொள்வதாக, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.