பெரம்பலூர்: கரும்பு டன் ஒன்றிற்கு ரூ. 3 ஆயிரம் வழங்க கோரி பெரம்பலூரில் கரும்பு விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் எறையூர் சர்க்கரை மூலம் கரும்பு வெட்டியதில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கித்தொகை 32 கோடியே 22 லட்சம் உடனே வழங்க கோரியும்,
2015 -16 ஆம் ஆண்டு அறவைப்பருவத்திற்கு மத்திய அரசு மாநில அரசு பரிந்துரை விலையையும் சேர்த்து ஒரு டன்னுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க கோரியும்,
பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் இந்த ஆண்டு அறவைப்பருவத்திற்கு இணை மின்சாரம் துவங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்என்பது ள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் பங்குதாரர்கள் சங்கம் இணைந்து பெரம்பலூர் அருகே உள்ள எறையூர் சர்க்கரை ஆலை நுழைவு வாயில் முன் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
மாவட்ட தலைவர் ஏ.கே.ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் என்.காமராஜ், மாவட்ட துணைத்தலைவர் கருப்புடையார், துணைசெயலாளர் ஆர்.மணிகண்டன், மற்றும் எம்.ரவிக்குமார், இ.வெங்கடாஜலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜாசிதம்பரம் மாவட்ட செயலாளர்கள் எ.அன்பழகன், எஸ்.முருகேசன், மற்றும் அகரம் சிகூர் எ.பெருமாள், திருவாளந்துரை டி.எஸ்.ராமசாமி வட்ட தலைவர் ஆர்.வேல்முருகன், ஒகளுர் ராஜாமணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.