பெரம்பலூர் மாவட்டம், வேப்பூரில் உள்ள பாரதிதாசன் உறுப்பு மகளிர் கல்லூரியில் இளைஞர் எழுச்சி நாளினை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். கல்லூரி முதல்வர் சுப்பிரமணியன், ஒன்றியக் குழுத் தலைவர் கிருஷ்ணகுமார், ஊராட்சித் தலைவர் கருணாநிதி உள்பட மாணவர்கள் உடன் இருந்தனர்.