பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கல்பாடியில் அமைந்துள்ள ஸ்ரீஅய்யனார், ஸ்ரீ தொட்டியத்தான் கோயில் தேர்திருவிழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.
கல்பாடியில் உள்ள ஸ்ரீஅய்யனார், ஸ்ரீதொட்டியத்தான் கோயில் தேர்திருவிழாவையொட்டி கடந்த 15ம் தேதி பூச்சொரிதலுடன் விழா தொடங்கியது.
22ம் தேதி காப்பு கட்டுதலை தொடர்ந்து தினமும் குதிரை, சிம்ம, குதிரை, யானை வாகனங்களில் அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா வந்தது. 29ம் தேதி மாவிளக்கு பூஜையும், வெட்டுக்குதிரையில் சுவாமி அலங்கரிக்கப்பட்ட திருவீதி உலா வந்தது.
தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (30ம் தேதி) காலை 7 மணிக்கு நடந்தது.
தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மாலை 6 மணிக்கு நிலை நின்றது.
இதில் கல்பாடி உட்பட சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாளை (31ம்தேதி) மஞ்சள் நீராட்டு விழாவும், காப்பு அவிழ்ப்பு விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.