கல்லூரி மாணவர்களுக்கான முதலமைச்சரின் மின் ஆளுமை விருது 2015-2016 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது அறிவித்துள்ளார்

மின் ஆளுமை திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், திட்டத்தினை ஊக்குவித்திடும் வகையிலும், கல்லூரி மாணவர்களுக்கு முதலமைச்சரின் மின் ஆளுமை விருது 2015-2016 வழங்கப்படவுள்ளது.

இந்த விருதிற்கு கல்லூரி மாணவர்கள் மின்ஆளுமை திட்டத்தை மேம்படுத்திட புதுமையான மென்பொருள் (Development of innovative e-Governance Software application) என்ற தலைப்பின் கீழ் உருவாக்கம் செய்து விண்ணப்பங்கள் அளித்திட வேண்டும்.

விண்ணப்பங்கள் மாவட்ட அளவிலான குழுவில் பரிசீலனை செய்யப்பட்டு, பின்னர் மாநில அளவிலான குழுவிற்கு பரிந்துரை செய்யப்படும். சிறந்த மென்பொருள் உருவாக்கம் செய்திடும் கல்லூரி மாணவர்கள் குழுவிற்கு முதலமைச்சாரின் மின் ஆளுமை விருது 2015-2016 வழங்கப்படும்.

இந்த விருதிற்கு அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் 4 முதல் 8 நபர்கள் கொண்ட குழுவாக பங்கேற்கலாம்.

விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பத்தினை 10.08.2015 முதல் 11.09.2015 வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட மின் ஆளுமை சங்கப் பிரிவில் (DeGS) பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்ப பட்டியலை பூர்த்தி செய்து பயிலும் கல்லூரி முதல்வரிடம் கையொப்பமிட்டு திட்ட அறிக்கை (Project Report) விவரங்களை இணைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட மின் ஆளுமை சங்க பிரிவல் (DeGS) 11.09.2015 அன்று மாலை 5.00 மணிக்குள் தபால் மூலமாகவோ, நேரிலோ சமர்பிக்கப்பட வேண்டும்.

மேலும் இது தொடர்பான அனைத்து விவரங்களும் www.perambalur.nic.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 9788532233 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!