பெரம்பலூர் : பெரம்பலூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீழக்கணவாய் அரசு தொழில் நுட்பக் கல்லூரியில் பயிலும் 101 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் மருதராஜா முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் தரேஸ்அஹமது இன்று வழங்கினார்.
அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டு வரும் விலையில்லா மடிக்கணினி திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களை சேர்ந்த மாணவர்களும் இந்த உலகத்தில் அனுதினமும் நடைபெறும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்ப்பட்டிருக்கிறது.
தொழில்நுட்பத் துறையில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ன உள்ளுணர்வோடு நீங்கள் பணியாற்ற வேண்டும். புதிய கருவிகளை, சிந்தனைகளை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். உங்களின் சிறந்த படைப்புகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காட்சிப்படுத்தப்படும்.
கல்விக்காக உங்களுக்கு தேவைப்படும் எந்த உதவியையும் தயங்காமல் தெரியப்படுத்தலாம். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்யும். என பேசினார்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சுந்தரராஜன், பெரம்பலூர் ஒன்றியக்குழுத் தலைவர் ஜெயக்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் வடிவேல், ஒன்றியக்குழு உறுப்பினர் அண்ணாதுரை, செஞ்சேரி ஊராட்சி மன்றதலைவர் ஜெகதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.