பெரம்பலூர்: கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப் படுத்தாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி முற்போக்கு மாணவர் கழகம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
விடுதலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முற்போக்கு மாணவர் கழகம் மாவட்ட அமைப்பாளர் சி.தமிழ்மாணிக்கம் இன்று கொடுத்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் சுமார் 50 மேற்பட்ட தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இவற்றில் அரசானை 92.ன் படி கல்வி உரிமைச் சட்டம் வழங்கிட வேண்டும், மறுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தனியார் நிறுவனங்களின் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். கல்வி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தார். அப்போது வி.சி.க மாவட்ட செயலாளர் பொன்.தங்கதுரை, வக்கீல் ஸ்டாலின், உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.