பெரம்பலூர்: புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக அரசால், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு கல்வி கட்டண சலுகை அளித்த (அரசாணை 92) மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை முறையாக நடைமுறைபடுத்தாத பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட கல்வி அலுவலகத்தை கண்டித்து, அக்கட்சியின் மாவட்ட தலைவர் வெள்ளையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில செயலாளர் வி.என்.சுந்தர் போராட்ட உரையை துவக்கி வைத்தார்.
மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் முன்னிலை வகித்தார். மாநில பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் ஒன்றியம், நகரம், ஆலத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த ஏராளமான பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கட்சியை சேர்ந்த இருபால் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
சேலம், கடலூர், திருச்சி மாவட்ட, மண்டல பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் , தலித், பழங்குடி மாணவர்களுக்கு கல்வி கட்டண விலக்கு அளித்த அரசானை 92யை நடைமுறைபடுத்த வேண்டும்,
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஏழை எளிய மாணவர்களுக்கு வழங்கப்படும் 25 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்தாத பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்,
கல்வி உதவித் தொகை பெற்றுத்தராத கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும்,
நடைமுறை படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்ட ஆர்பாட்டம் நடைபெற்றது. பின்னர், மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.