பெரம்பலூர், கரூர், உடையார்பாளையம் மற்றும் அரியலூர் ஆகிய 4 கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய பெரம்பலூர் மண்டல அளிவிலான தடகளப் போட்டிகள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இப்போட்டிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது துவக்கி வைத்தார். விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடியினை ஏற்றி வைத்தும், ஒலிம்பிக் தீபத்தினை ஏற்றி வைத்தும் போட்டிகளை துவக்கி வைத்தார்.
இன்றும் நாளையும் இப்போட்டிகள் நடக்கிறது. 14,17,19 ஆகிய வயதுக்குட்பட்ட பிரிவுகளில் தனித்தனிப் பிரிவுகளாக போட்டிகள் நடைபெறுகிறது. இன்று 100மீ, 200மீ, 400மீ, 600மீ, 800மீ, 1500மீ, 5000மீ, 3000மீ ஆகிய ஓட்டப்போட்டிகள், 80மீ, 100மீ, 110மீ, தடைதாண்டும் போட்டிகள், உயரம், தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், 4 X 100 தொடர் ஓட்டப்போட்டிகள் ஆகிய போட்டிகள் நடத்தப்படும். இப்போட்டிகளில் 688 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
வெற்றி பெறும் வீரர், வீராங்கணைகளுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்படும். முதல் 2 இடங்களில் வெற்றி பெறும் வீரர், வீராங்கணைகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெறுவர்.
இந்நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி, மாவட்ட விளையாட்டு அலுவலர் இராம சுப்பிரமணியராஜா, அரியலூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சந்திரன், கரூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பி. தங்கமணி, பெரம்பலூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஜயன் பெரம்பலூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஜயன், கீழப்பெரம்பலூர் தலைமை ஆசிரியர் செல்வராஜ் உள்ளிட்ட ஆசிரியர்கள், விளையாட்டு பயிற்றுநர்கள் கலந்துகொண்டனர்.