பெரம்பலூர் : காணாமல் போன பள்ளி ஆசிரியை காதல் கணவருடன் அரும்பாவூர் போலீசார் மீட்டு வந்தனர்.
பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூரை சேர்ந்தவர் தர்மராஜ் மகன் பிரபு (32), தனியார் கல்லூரி பேருந்து பஸ் ஓட்டுநராக உள்ளார்.இவரும், அரும்பாவூர் அருகே மேட்டூர் கிராமத்தை சேர்ந்த ரெங்கராஜீ மகள் வினோதினி(26). அதே பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். கடந்த சில வருடங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
பிரபுவும், வினோதினியும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரின் திருமணத்திற்கும் அவர்களது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 17ந்தேதி பிரபு, வினோதினி இருவரும் வீட்டை விட்டு வெளியே சென்று, பெரம்பலூர் அருகே உள்ள செட்டிகுளம் முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு தலைமறைவானர்கள்.
இந்நிலையில், வினோதினியை காணவில்லை என அவரது தாய் சந்திரா கொடுத்த புகாரின் பேரில் அரும்பாவூர் காவல் நிலையத்தில் கடந்த நேற்று புகார் செய்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரனையில், பிரபுவும், வினோதினியும் சென்னை மகாபலிபுரம் பகுதியில் இருப்பதாக தெரிய வந்தது.
இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையில் மகாபலிபுரம் சென்று இருவரையும் மீட்டு வந்து அரும்பாவூரில் பெற்றோர்கள் முன்பு நேர் நிறுத்தினர்.
பெற்றோரின் பாசத்தால் குழம்பிய வினோதினி வேலூர் மாவட்டத்தில் உள்ள தனது பெரியம்மா வீட்டிற்கு செல்வதாகவும், ஓர் ஆண்டு கழித்து தனது வாழ்க்கை குறித்து தானே முடிவு எடுத்துக் கொள்வாகவும் கூறி சென்றார்.