பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள முகமது பட்டிணத்தை சேர்ந்தவர் நெகமதுல்லா மகள் ரிங்வானாபேகம் (18). இவர் கடந்த 25.03.2015 ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இது தொடர்பாக நெகமதுல்லா தனது மகளை காணவில்லை என அரும்பாவூர் போலீசில் புகார் தெரிவித்திருந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ரிங்வானாபேகத்தை தேடிவந்தனர்.
இந்நிலையில் நேற்று திடீரென அரும்பாவூர் காவல் நிலையத்தில் ரிங்வானாபேகம் ஆஜராகி தனக்கு முகமுது பட்டிணத்தை சேர்ந்த ரவிக்குமார் (26), என்பவருடன் திருமணம் நடந்து விட்டதாக தெரிவித்தார்.
பின்னர், அவரை பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி சுஜாதா முன்னிலையில் போலீசார் ஆஜர்ப்படுத்தினர்.
அப்போது நீதிபதியிடம் ரிங்வானாபேகம் தனக்கு திருமணம் ஆகி விட்டதாகவும் கணவர் ரவிக்குமாருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து அவரை கணவருடன் செல்ல உத்தரவிட்டு, வழக்கை நீதிபதி சுஜாதா முடித்து வைத்தார்.