பெரம்பலூர்,ஜூலை.07:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே தலைமறைவான காதல் ஜோடியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே நூத்தப்பூர் கிராமத்தை சேர்ந்த செல்லதுரை மகன் அறிவழகன்(22), என்பவரும் அதே ஊரைச்சேர்ந்த முதலி மகள் வினோதினி(17), என்பவரும் கடந்த 1 வருடமாக காதலித்து வந்தனர்.
இந்நிலையில் பெற்றோரின் எதிர்ப்பால் கடந்த 28ந்தேதி வீட்டை விட்டு
வெளியேறிய காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டு தலைமைறவானது.
இதனைத்தொடர்ந்து காதல் ஜோடியின் பெற்றோர்கள் கை.களத்தூர் காவல்
நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான காதல்
ஜோடியை தேடி தீவிரமாக வந்தனர்.
இந்நிலையில் சேலத்தில் இருப்பதாக இரகசிய தகவலறிந்த போலீசார் அங்கு சென்று அறிவழகன் வினோதினி ஜோடியை அழைத்து வந்து பெரம்பலூர் மாவட்ட ஜே.எம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட காதல் ஜோடி தாங்கள்
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றும் இதனால் இருவரையும் சேர்ந்து வாழ பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், அதனால் தான் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதாகவும், தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்திட வேண்டும் என்றும், நிதிபதியிடம் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து காதல் ஜோடியின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி அவர்களுக்கு
உரிய பாதுகாப்பு அளித்திடவும், வினோதினி திருமண வயதை அடையாததால் அவரை
திருச்சியில் அரசு காப்பத்தில் தங்க வைத்திடவும் உத்தவிட்டார்.
இதனைத்தொடர்ந்து அறிவழகன் அவரது பெற்றோருடனும், வினோதினி அரசு
காப்பகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.