பெரம்பலூர்: இன்று மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினத்தை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையப்பகுதியில் அமைந்துள்ள அண்ணல் காந்தியடிகளின் முழுஉருவச்சிலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பி.மருதராஜா (பெரம்பலூர்), சந்திரகாசி மற்றும் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் ,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பாவேந்தன், நகராட்சி தலைவர் ரமேஷ், நகராட்சி ஆணையர் முரளி, குரும்பலூர் பேரூராட்சித் தலைவர் ந.பாப்பம்மாள், பெரம்பலூர் வட்டாட்சியர் செல்வராஜ், காதி கிராப்ட் மேலாளர் கோவிந்தராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதே போன்று கட்சி பிரமுகர்களும் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.