பெரம்பலூர் மாவட்ட தேமுதிக சார்பில் இன்று பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி உயிர் துறந்த காந்தியவாதி சசிபெருமாள் உருவபடத்திற்கு தேமுதிக மாவட்ட செயலாளர் துரை.காமராஜ் தலையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் புதிய பேருந்து நிலையத்தின் அருகேயுள்ள அரசு மதுபானக்கடையின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அருகில் உள்ள அரசு மதுபானக்கடையன் மதுக்குடிப்பகத்தில் குடியை நிறுத்த வலியுறுத்தி கையேந்தி நூதன பிரச்சாரத்தில் ஈடுப்பட்டனர்.
அப்போது, மது அருந்துபவர்களிடம் தயவு செய்து மது அருந்த வேண்டாம் என்று மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்றும் கூறி கையேந்தி அறிவுறுத்தபட்டது .
மது என்னும் அரக்கனை நாட்டை விட்டு விரட்ட சபதம் ஏற்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர் கணபதி மாவட்ட பொருளாளர் சீனி.வெங்கடேசன்,மாவட்ட துணை செயலாளர் ஆர்.கண்ணுசாமி,சிவகுமார் பொதுக்குழு உறுப்பினர் ரவிகுமார், கேப்டன் மன்ற செயலாளர் தவசிஅன்பழகன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சஞ்சீவி ,
தொழிற்சங்க நிர்வாகிகள் இளையராஜா , சுரேஷ் ஒன்றிய செயலாளர் மலர்மன்னன், சிவ.ஐயப்பன் குரும்பாலூர், நகர செயலாளர் ரமேஷ் மற்றும் ஒன்றிய நிர்வாகி நீல்ராஜ் கலைச்செல்வன் சதீஷ், ராஜேஷ்,பாலகிருஷ்ணன், கனகராஜ், சுந்தரபாண்டியன், முத்துவேல், கோவிந்தன், வெங்கடேஷ் மற்றும் கட்சி நிர்வகிகள் கலந்துகொண்டனர்.