பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளான வரும் ஞாயிறன்று தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறையின் நாட்டு நலப்பணித்திட்ட இணை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் அனைத்து பள்ளிகளிலும், கல்வி வளர்ச்சி நாளான வரும் ஞாயிறன்று, காமராஜரின் உருவப்படத்தை அலங்கரித்து விழா எடுக்க அறிவுத்தப்பட்டுள்ளது. விழாவில் மாணவர்களுக்கு பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், காமராஜரின் அரும்பணிகள் குறித்து விளக்கப்பட்டு சிறப்பாக கொண்டாடுமாறும் பள்ளிக்கல்வித் துறையின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.