பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை வட்டம் காரியானூர் குண்டுபடா செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிக்கும்பிட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அருகே உள்ள காரியானூரில் விநாயகர் குண்டுபடா செல்லியம்மன், வேம்படியான், ஆகாசதுரை, அய்யனார் சுவாமி கோவில்கள் மற்றும் பரிவார தேவதைகள் கோவில்கள் உள்ளது. இந்த கோவில்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து தற்போது இக்கோவில்களில் திருப்பணிகள் செய்து மகா கும்பாபிஷேகம் நடத்த கிராமப் பொதுமக்கள் திட்டமிட்டமிட்டனர். அதன்படி திருப்பணிகள் செய்து முடித்து கடந்த செவ்வாய் கிழமை மகா கும்பாபிஷேக விழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜை, நவக்ரஹ ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி மற்றும் பிரவேச பலி நடைபெற்றது. தொடர்ந்து இன்று புண்யாவாசனம், கும்பலங்காரம், யாகசாலை பிரவேசம், முதற்கால யாக பூஜை, பூர்ணாஹூதி, இரண்டாம் கால யாக பூஜை, தீபாராதனை, மூன்றாம் கால யாக பூஜை, விமானம் கலசம் வைத்தல், யந்திரஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்ட வைபவங்கள் நடைபெற்றது.
தொடர்ந்து இன்று மங்கள் இசை, தேவார திருமுறை, நான்காம் கால யாக பூஜை, சுவாமிகள் கண்திறப்பு, அபிஷேக அலங்கார ஆராதனை, கோ பூஜை, நாடி சந்தானம் உடன் பூர்ணாஹூதி தீபாரதனை நடைபெற்றது. இதனையடுத்து காலை 8.30 மணியளவில் கடம் புறப்பாடு செய்து கோபுர கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது தீயணைப்பு துறை வாகனம் உதவியுடன் கும்பாபிஷேக புனிதநீர் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது. இதில் பெரம்பலூர் ஒன்றியக்குழு தலைவர் ஜெயக்குமார், அரசு வழக்கறிஞர் குலோத்துங்கன், அ.தி.மு.க ஊராட்சி செயலாளர் சேகர் மற்றும் காரியானூர், வெள்ளுவாடி, கை.களத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் முக்கியஸ்தர்கள் செய்து இருந்தார்கள்.