வேப்பந்தட்டை அருகே கார்மோதி ஏற்பட்ட விபத்தில் கடலூரை சேர்ந்த தொழில் அதிபர் பலியானார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா எழுத்தூரை சேர்ந்தவர் ராமலிங்கம்( வயது70). இவருக்கு பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகில் சொந்தமாக திருமணமண்டபம் உள்ளது. இன்று மாலை அவர் தனது மண்டபத்திற்கு வழக்கம் போல் வந்துவிட்டு பின்னர் பஸ்சில் ஊர் திரும்புவதற்க்காக தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது எதிர் பாராத விதமாக காஞ்சிபுரத்திலிருந்து ராமேஸ்வரம் சென்ற கார் அவர் மீது மோதியது. இதில் ராமலிங்கம் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனே அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராமலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மங்களமேடு போலிசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.