பெரம்பலூர் அருகே, வியாழக்கிழமை மாலை கார் மோதி முதியவர் உயிரிழந்தார்.
பெரம்பலூர் அருகேயுள்ள நெடுவாசல் கிராமம் தெற்கு தெரவை சேர்ந்தவர் சிதம்பரம் மகன் பொன்னுசாமி (60).
இவர், வியாழக்கிழமை மாலை பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் மூன்றுசாலை சந்திப்பு அருகே நடந்து சாலையைக் கடக்க முயன்றார்.
அப்போது, ராமேஸ்வரத்திலிருந்து சென்னை நோக்கி சென்ற கார் பொனஅனுசாமி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து கார் ஓட்டுநர் சென்னையை சேர்ந்த அப்து பாஷித்தை கைது செய்து விசாரிக்கின்றனர்.