பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் பணியிடத்திற்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தகவல்

அதன் விபரம் வருமாறு:

பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள ஒரு ஈப்பு ஓட்டுநர் பணியிடத்திற்கு இனசூழற்சி முறையின்படி பிற்படுத்தப்பட்டோர் (பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் தவிர) முன்னுரிமையற்றவர் இனத்தில் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை 20.08.2015 ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களிடம் நேரிலோ அல்லது அசல் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.

இப்பணியிடம் முற்றிலும் தற்காலிமானது இப்பணியிடத்தில் சேரும் நபா;கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி பணியிலிருந்து வெளியேற்றம் செய்யப்படுவார்கள். இப்பணியில் சேருபவர்கள் பின்னார் எவ்வித முன்னுரிமையும் கோர இயலாது.

எனவே, ஈப்பு ஒட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் எட்டாம் வகுப்பு தேர்ச்சி கல்விச் சான்றிதழ் (கல்விச்சான்று), தமிழ்நாடு மோட்டார் வாகனச்சட்டம் 1940ன்படி ஓட்டுநர் உரிமம் வழங்க அதிகாரம் பெற்ற அலுவலரால் வாங்கப்பட்ட நடப்பில் உள்ள ஒட்டுநர் உரிமம் கொண்டு வர வேண்டும்.

(இலகுரக அல்லது கனரக வாகனம் ஒட்டுநர் உரிமச்சான்று ), மோட்டார் வாகனம் பழுது நீக்கம் குறித்து அறிவு பெற்றவராக இருக்க வேண்டும்.

இரண்டு ஆண்டுகளுக்கு குறையாத கனரக வாகனம் அல்லது இலகுரக வாகனம் ஒட்டியமைக்கான முன் அனுபவச் சான்று கொண்டுவர வேண்டும். மேற்கூறிய தகுதியுடைய நபர்கள் 20.8.2015க்குள் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் (பொது) விண்ணப்பிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!