பெரம்பலூர்: கால்நடைகளுக்கு மானிய விலையில் உலர் தீவனம் வழங்கும் திட்டம்
எம்.பி. சந்திரகாசி வேப்பூரில் துவக்கி வைத்தார்.
நடப்பு ஆண்டில் பருவமழை ஏமாற்றத்தை அளித்ததால், ஏரிகள், குளங்கள் நீரின்றி மீண்டும் வறண்டு தொடங்கி விட்டன. இதனால் தீவனப் பற்றாக்குறையால் கால்நடை வளர்ப்போர் கடும் பாதிப்புக்குள்ளாகி அவதிப்பட்டு வருகின்றனர்.
வைக்கோல் கிலோ ரூ.5-க்கும், சோளத்தட்டு கிலோ ரூ.20-க்கும் வெளிச் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் வறட்சி நிவாரணத் திட்டத்தில் வேப்பூர் கால்நடை மருத்துவமனையில் உலர் தீவன கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.
கால்நடைகளுக்கு ஒரு கிலோ வைக்கோல் ரூ. 2 வீதம் மானிய விலையில் ஒரு மாட்டிற்கு ஒரு நாளைக்கு 3 கிலோ வீதம் அதிக பட்சம் 5 மாடுகளுக்கு வாராந்திர தேவையின் அடிப்படையில் வாரம் ஒரு முறை 105 கிலோ தொடர்ச்சி யாக இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு வழங்க திட்ட மிடப்பட்டுள்ளது.
கால்நடை வளர்ப்போர் தங்களது ரேஷன் கார்டு நகல், பாஸ்போர்ட் அளவு போட்டோ இரண்டு நகல் மற்றும் கால்நடைகளின் இருப்பு விபரம் ஆகியவற்றை அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களில் கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பதிவு செய்தவர்களுக்கு ‘‘கால்நடை தீவனம் வழங்கும் அட்டை’’ வழங்கப்படும். அவ்வட்டையை காண்பித்து வேப்பூர் தீவன கிடங்கில் மானிய விலையில் வைக்கோல் பெற்றுக் கொள்ளலாம். வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 33 ஊராட்சிகளில் உள்ள கால்நடைகள் வளப்போர் பயன் பெறலாம் என தெரிவித்துள்ளனர்.
இத்திட்டத்தினை சிதம்பர தொகுதி எம்.பி. சந்திரகாசி துவக்கி வைத்து பயனாளிகளுக்கு மானிய விலையில் உலர் தீவனம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குனர்.சந்திரசேகர், உதவி இயக்குனர் மனோகர், கால்நடை துறை துணை இயக்குனர் மோகன், வேப்பூர் அதிமுக ஒன்றிய செயலாளர் கிருஷ்ணசாமி, காடூர் ஸ்டாலின், வேப்பூர் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் கிருஷ்ணகுமார், உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கால்நடைகளுக்குத் தீவன வங்கி வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. தீவனப் பற்றாக்குறையைப் போக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், பால் உற்பத்தி குறைவு ஏற்படாமலும், மாடுகளின் உணவு பற்றாக்குறையைப் போக்குவதன் மூலம் அடிமாடுகளாக விற்பனை செய்வதைத் தடுத்து கால்நடை வளர்ப்பவர்களின் வாழ்வாதாரம் மேம்பட நல்லதொரு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!