கால் பந்து விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவ, மாணவியர் மற்றும் இளைஞர் மன்றங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தரேஸ்அஹமது கால் பந்துகளை வழங்கினார்.
இந்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகின்ற நேரு யுவகேந்திரா மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பாக கால் பந்து விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவ, மாணவியர் மற்றும் இளைஞர் மன்றங்களுக்கு கால்பந்து வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் தரேஸ்அஹமது தலைமையில் இன்று (19.08.2015) பெரம்பலூர் அரசு மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது:
இன்றைய சூழ்நிலையில் மாணவர்கள் படிப்பின் மீது ஆர்வம் காட்டும் அளவிற்கு விளையாட்டு போட்டிகளில் ஆர;வம் காட்டுவது மிகவும் குறைந்து வருகின்னறது. மேலும் மாணவர்களிடையே விளையாட்டு போட்டிகளின் மூலம் உடல் வளமும், மன ஒருமைபாடும் அதிகரிப்பது தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் விதத்தில் இது போன்று இலவசமாக கால்பந்துகள் அளிப்பதன் இது சாத்தியமாகும். எனவே இன்று கால்பந்து பெற்ற அனைவரும் தினமும் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிகளுக்கு ஒரு மணி நேரமாவது ஒதுக்க வேண்டும் என பேசினார்.
ரிலையன்ஸ் அறக்கட்டளையின் திட்ட ஒருங்கினைப்பாளர் கலைவாணி அவர்கள் பேசியதாவது:
ரிலையன்ஸ் அறக்கடளையின் சார்பில் ஒற்றுமை, சகோதரத்துவம் விட்டுக்கொடுத்தல் ஆகிய பண்புகளை இளைஞர்களுக்கிடையே வளர்க்கும் விதமாகவும் கால்பந்து விளையாட்டைஊக்குவிக்கும் விதமாகவும் மொத்தம் ஒரு இலட்சம் கால்பந்துகளை இலவசமாக இந்தியா முழுவதும் வழங்கிவருகிறோம். இதில் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டத்தில் இருநூறு கால்பந்துகள் கால்பந்து விளையாட்டில் ஆர்வமுள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் நேருயுவ கேந்திரா இளைஞர் மன்றத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கும் வழங்கியிருக்கிறோம் என பேசினார்
இந்நிகழ்ச்சியில் நேரு யுவ கேந்திராவின் தமிழரசன் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஜயன், மற்றும் பெரம்பலூர் மாவட்ட உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். ரிலையன்ஸ் அறக்கட்டளயின் வேளாண் தொழில் நுட்ப வல்லுநர் இரத்தினராஜா நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நேரு யுவ கேந்திரா தேசிய இளையோர் படை தொண்டர்கள் மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் அலுவலர்கள் செய்திருந்தார்கள்.