பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே, ரோந்துப் பணிக்கு சென்ற காவலரை தகாத வார்த்தைகளால் திட்டி, அரசுப்பணி செய்யவிடாமல் தடுத்த பெரம்பலூர் நகராட்சி துப்புரவு பணியாளரை, பெரம்பலூர் போலீஸார் இன்று மாலை கைது செய்தனர்.
பெரம்பலூர் அருகேயுள்ள செங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் மகன் தண்டபாணி (25). இவர், பெரம்பலூர் நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், பெரம்பலூர் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் உள்ள அவரது உறவினரிடம், மதுபோதையில் இருந்த தண்டபாணி இன்று மாலை தகராறில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அவ்வழியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் ரகுநாத், தண்டபாணியை விலகி செல்லுமாறு தெரிவித்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த தண்டபாணி தகாத வார்த்தைகளால் ரகுநாத்தை திட்டியதோடு, அரசுப்பணி செய்யவிடாமல் தடுத்தாராம்.
இதுகுறித்து, ரகுநாத் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த பெரம்பலூர் போலீஸார் தண்டபாணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்