பெரம்பலூர் : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை திருச்சி காவிரி ஆற்றில் கரைப்பதற்காக இன்று இரவு வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 156 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.
பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் 40க்கும் மேற்பட்ட சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டன. இதில், 155 சிலைகளில் 95 சிலைகள் திருச்சி காவிரி ஆற்றில் கரைப்பதற்காக அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் மின்விளக்குகள் அலங்காரத்துடன் இன்று இரவு அந்தந்தப் பகுதிகளிலிருந்து ஊர்வலமாக எடுத்துசெல்லப்பட்டது. மீதமுள்ள சிலைகளில் மங்களமேடு, வி.களத்தூர், கை.களத்தூர் காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் வெள்ளாற்றிலும், அரும்பாவூரில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் கல்லாற்றிலும் கரைக்கப்பட்டன.