பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த மகளை காப்பாற்ற முயன்ற தாயும் பலியான சம்பவம் அரும்பாவூர் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியை சேர்ந்தவர் பிரசாத் மனைவி ரேவதி,25, இவர் தனது குழந்தைகளுடன் கோடை விடுமுறைக்காக தனது தாய் வீடான பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் கிராமத்தை சேர்ந்த அழகு மனைவி அங்கம்மாள்,50, என்பவரது வீட்டுக்கு வந்து தங்கியிருந்தார்.
இந்நிலையில் நேற்று தனது தாய் அங்கம்மாள், தனது அக்கா மகள் இலக்கியா ஆகியோருடன் அரும்பாவூரிலிருந்து மேட்டூர் கிராமத்துக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு கிணற்றுக்கு குளிப்பதற்காக ரேவதி சென்றார்.
கிணற்றில் குளிக்க இறங்கியபோது அங்கம்மாள் கிணற்றுக்குள் தவறி விழுந்ததாக தெரிகிறது. அங்கம்மாளுக்கு நீச்சல் தெரியததால் தனது தாயை காப்பற்றுவதற்காக ரேவதி கிணற்றுக்குள் குதித்து தாயை காப்பற்ற முயற்சித்தபோது இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.
இதை நேரில் பார்த்துக்கொண்டிருந்த இலக்கியா இது குறித்து வீட்டிற்கு ஓடி வந்து உறவினர்களிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்த பெரம்பலூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கம்மாள், ரேவதி ஆகியோரின் உடலை தேடும் பணி நடந்து வருகிறது.
இது குறித்து அரும்பாவூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்