பெரம்பலூர : செட்டிக்குளம் அருகே கிணற்றுக்குள் விழுந்த புள்ளிமானை தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினர் உயிருடன் மீட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம் கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் புள்ளிமான் ஒன்று தத்தளிப்பதாக பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் வந்தது.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் கிணற்றுக்குள் கயிற்று வலை மூலம் மானை மீட்டனர்.
மானின் உடலில் தலையில் லேசான காயம் இருந்தது. இதற்கு வனத்துறையினர் கால்நடை டாக்டர்கள் மூலம் சிகிச்சை அளித்தனர்.