கிராம சுகாதார செவிலியர் காலிப்பணியிடத்திற்கு பதிவுதாரர்கள் தங்களது கல்வித்தகுதியினை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியர் தரேஸ்அஹமது தகவல்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

தமிழ்நாடு மருத்துவப்பணியாளர் தேர்வு வாரியத்தால் 1819 கிராம சுகாதார செவிலியர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கான கல்வித்தகுதியாக கீழ்க்குறிப்பிட்ட ஏதாவது ஒரு கல்வித்தகுதியை பெற்றிருப்பதுடன் அக்கல்வித்தகுதி தமிழக அரசின் மருத்துவப்பணிகள் இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

மல்ட்டி பர்ப்பஸ் ஹெல்த் ஒர்க்கர் (Multi Purpose Health Worker) அல்லது மிட்வைப்ரி டிப்ளமோ (Diploma in Midwifery) அல்லது ஹெல்த் விசிட்டர்ஸ் ( (Health Visitors) அல்லது ஏ.என்.எம் டிப்ளமோ (Diploma in Auxillary Nurse Midwife) தகுதி பெற்று தமிழ்நாடு நர்ஸிங் கவுன்சிலில் பதிவு செய்திருத்தல் வேண்டும். வயது வரம்பு 01.07.2015 அன்று அனைத்து பிரிவினருக்கும் 40 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.

இப்பணிக்காலியிடத்திற்கு மாநில அளவு பதிவுமூப்பில் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட உள்ளதால் தகுதியுள்ள இவ்வலுவலக பதிவுதாரர்கள் தங்களது கல்வித்தகுதியினை உறுதிப்படுத்திக்கொள்ளும் பொருட்டு அனைத்து அசல் கல்விச் சான்றுகளுடன் 15.09.2015-க்குள் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அவர்களைத் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!