பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு அவ்வப்போது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் வெளியிடப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும் இணைந்து நடத்தி வருகிறது.
இப்பயிற்சி வகுப்புகள் மூலம் பயின்று பலரும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசுப்பணிகளில் சேர்ந்துள்ளனர். தற்போது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் வி.ஏ.ஒ தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 14.12.2015 ஆகும்.
இத்தேர்விற்கு பத்தாம் வகுப்பு முடித்த அனைவரும் விண்ணப்பிக்கலாம். கிராம நிர்வாக அலுவலர் தேர்விற்கான இலவச பயிற்சியானது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பயிற்சி அரங்கில் 23.11.2015 முதல் நடத்தபட உள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தின் நகல், வேலைவாய்ப்பு அடையாள அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் கைபேசி எண் ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ளமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், விபரங்களுக்கு 04328-225352 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தெரிவித்துள்ளார்.