தமிழக சத்துணவுத் திட்டத்திற்கு முட்டை பருப்பு ஆகியவற்றை வினியோகம் செய்த கிருஷ்டி நிறுவனங்கள் உட்பட பல்வேறு இடங்களில் நடைப்பெற்ற வருமானவரித்துறை சோதனை நிறைவுக்கு வந்தது.சென்னை, நாமக்கல், திருச்செங்கோடு, இராசிபுரம், கோவை மற்றும் பெங்களூரு உட்பட 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். ஐந்து நாட்கள் நடத்தப்பட்ட இந்த சோதனையில் கணக்கில் வராத 17 கோடி ரூபாய் ரொக்கம் 10 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.ஏராளமான வரவு செலவு ஆவணங்கள் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்நிறுவனத்தின் நிர்வாகிகள் பெயரில் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் சொத்துக்கள் வாங்கி உள்ளது விசாரணையில் தெரியவந்திருப் பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சோதனை முடிவுற்ற நிலையில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஆவணங்களை சரிபார்க்கும் பணி முடித்து, பிறகு தேவைப்பட்டால் சம்மன் கொடுத்து விசாரிக்க வருமான வரி துறை முடிவு செய்துள்ளது.