பெரம்பலூரில் டி.இ.எல்.சி.தூய யோவான் ஆலய நிர்வாகிகள் முறையற்ற செயல்பாடுகளை கண்டித்து உண்ணாரவிரத போராட்டம் இன்று நடந்தது.
பெரம்பலூரில் உள்ள டி.இ.எல்.சி. தூய யோவான் ஆலய வளாகத்தினுள் உள்ளிருப்பு உண்ணாவிரத போராட்டத்திற்கு, அறக்கட்டளை அமைப்பாளர் ரோவர் செல்வராஜ் ஜான் தலைமை வகித்தார். பொறுப்பாளர்கள் ரத்தினசாமி, ஜெயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தமிழ் சுவிசேச லுத்திரன் திருச்சபையின் புதிய தூய யோவான் ஆலயம் கட்டுமானம், வணிக வளாகம் கட்டுமானம், சபையின் வரவு செலவு கணக்குகளை ஒப்படைக்காததை கண்டித்தும், நிர்வாகிகளின் முறையற்ற செல்பாடுகளை கண்டித்தும் பலர் பேசினர்.
போராட்டத்தில் உறுப்பினர்கள் கருணைவேந்தன், பெரியசாமி, சாம்சன்ஆசிர்வாதம், ராஜாரத்தினம், ரிச்சர்ட்ஜெயோசந்திரன், செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.