பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்திற்குட்ப்பட்ட சிறுகுடல் ஊராட்சியை சேர்ந்த 1461 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகளை சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசி இன்று வழங்கினார்.
அதனை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசி பேசியதாவது:
தமிழக முதலமைச்சர் தமிழகத்திலுள்ள அடித்தட்டு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு சிறப்பான திட்டங்களை அறிவித்து வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார;கள். அதன்படி இன்று சிறுகுடல் கிராமத்தைச் சேர்ந்த விவசாய பெருங்குடி மக்கள், கூலிவேலை செய்து அன்றாடம் வாழ்க்கையை வாழ்பவர்கள் மற்றும் ஏழை தாய்மார்களாகிய நீங்களெல்லாம் பயன்பெறும் வகையில் தமிழக முதலமைச்சர் விலையில்லா கிரைண்டர், மிக்சி மற்றும் மின்விசிறி வழங்கும் திட்டத்தின் கீழ் இக்கிரமத்தை சேர்ந்த உங்களுக்கு வழங்கிட உத்திரவிட்டதை தொடர்ந்து இவ்விலையில்லா பொருட்கள் இன்று உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
மேலும் கிராமப்புரங்களை சேர்ந்த ஏழை, எளிய தாய்மார்களின் நலனுக்காக திருமண நிதி உதவித்திட்டத்தின் கீழ் 4 கிராம் தங்கத்துடன் கல்லூரி படிப்பை முடித்தவர்களுக்கு ரூ.50,000 நிதி உதவியும், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மக்களும் பயன்பெற வேண்டும் என்பதற்காக விலையில்லா வௌ;ளாடுகளை வழங்கி வருகின்றார;;. இதன் மூலம் கிராமப்புறங்களை சேர்ந்த மக்களின் வாழ்வாதாரம் பெருகியுள்ளது என இவ்வாறு பேசினார்.
இந்நிகழ்ச்சியில், பெரம்பலூர் நகர் மன்ற துணைத் தலைவரும், அதிமுக மாவட்ட செயலாளருமான ஆர்.டி.ராமசந்திரன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவரும், வேப்பூர் ஒன்றிய செயலாளருமான கிருஷ்ணசாமி, வட்டாட்சியர் ஷாஜகான், கீழப்புலியூர் ஊராட்சி தலைவர் செல்வராஜ்,முன்னாள் ஊராட்சித் தலைவர் நடராஜன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.