பெரம்பலூர் : கீழப்பெரம்பலூர், முருக்கன்குடி கிராமங்களில் 3,099 பயனாளிகளுக்கு விலையில்லா மின்விசிறி, மிக்ஸி மற்றும் கிரைண்டர்களை சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசி வழங்கினார்.
தமிழக முதலமைச்சரின் சிறப்புத் திட்டங்களுள் ஒன்றான விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மற்றும் மின்விசிறி வழங்கும் விழா பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்திற்குப்பட்ட கீழப்பெரம்பலூர் மற்றும் முருக்கன்குடி ஆகிய கிராமங்களில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசி 3,099 பயனாளிகளிக்கு விலையில்லாப் பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்புத் திட்டங்களுக்கான தனித்துணை ஆட்சியர் சிவப்பிரியா, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் சகுந்தலா கோவிந்தன், குன்னம் வட்டாட்சியர் ஷாஜகான் வேப்பூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கிருஷ்ணகுமார், வேப்பூர் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணசாமி, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்