பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம் கீழமாத்தூர் ஊராட்சியில் ரூ12.80 இலட்சம் மதிப்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள பொதுமக்கள் சேவைமையத்தினை சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசி இன்று திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது:
கிராம அளவில் செயல்படும் கிராம வறுமை ஒழிப்பு சங்களின் செயல்பாடுகளை மேம்படுத்திடவும், வறுமை ஒழிப்பு சங்களிலுள்ள உறுப்பினர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கிடவும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கி அவர்களின் செயல்பாடுகளை மேம்படுத்துவதன் மூலம் கிராம பொருளாதாரத்தை மேம்படுத்திட முடியும். மேலும் பொதுமக்களுக்கு தேவையான வருவாய்த்துறையின் சான்றிதழ்களும் இம்மையத்தின் மூலம் பெற்றிட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய செயல்பாடுகள் மூலம் கிராம அளவில் செயல்பட்டு வரும் வறுமை ஒழிப்பு சங்கங்களின் செயல்பாடுகள் முழுமையான அளவில் செயல்படும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளரும், நகர் மன்ற தலைவர் ஆர்.டி.இராமசந்திரன், திருச்சிராப்பள்ளி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க இயக்குநரும், ஆலத்தூர் அதிமுக ஒன்றியலாளருமான என்.கே.கர்ணன், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர;.