பெரம்பலூர்: மங்கலமேடு அருகே உள்ள எறையூர் ஊராட்சியில் உள்ளது எஸ்.எல்.ஆர் காலணி உள்ளது. இந்த பகுதிக்கு கடந்த 2 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை எனக்கூறி அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் , பெரம்பலூரிலிருந்து எறையூர் வழியாக பெருமத்தூர் செல்லும் அரசு டவுன் பஸ்சை திடீரென சிறைப்பிடித்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து மங்களமேடு போலீசார் மற்றும் ஊராட்சி மன்றத்தலைவர் கொளஞ்சி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உடனடியாக தண்ணீர் வினியோகம் செய்யப்படும் என உறுதியளித்தனர். இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.