பெரம்பலூர்: பெரம்பலூரில் குடிபோதையில் பெண் போலீஸிடம் தகராறில் ஈடுபட்ட வக்கீல் இருவரை பெரம்பலூர் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பெரம்பலூர் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றுபவர் சுமதி,38, இவர் நேற்று ஸ்டேஷனில் பணியிலிருந்தபோது அங்கு வந்த வக்கீல்கள் அண்ணாதுரை, இளங்கோவன் ஆகியோர் பெண் ஏட்டு சுமதியிடம் ஆபாசமாக பேசி தகராறு ஈடுபட்டதாக தெரிகிறது.
இது குறித்து எஸ்.ஐ., பழனிசாமி கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிந்து வக்கீல்கள் அண்ணாதுரை, இளங்கோவன் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். வக்கீல்கள் இருவரும் ஜாமினில் வெளியில் வந்தனர்.