பெரம்பலூரில் விஷம் குடித்து இளைஞர் ஒருவர் நேற்றிரவு தற்கொலை செய்துகொண்டார்.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள எம்.கண்ணனூரை சேர்ந்தவர் ரமேஷ் மகன் சுரேஷ் (29). இவரது மனைவி பச்சையம்மாளின் உறவினர் வீடான, பெரம்பலூர் அருகேயுள்ள கல்பாடி கிராமத்துக்கு கடந்த 27 ஆம் தேதி குடும்பத்துடன் வந்திருந்தார். இந்நிலையில், கடந்த 29 ஆம் தேதி கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் வீட்டிலிருந்து வெளியே வந்த சுரேஷை காணவில்லை.
இதனிடையே, பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் நேற்றிரவு விஷம் குடித்து மயங்கி கிடந்த சுரேஷை பொதுமக்கள் பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சையின் போது அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பச்சையம்மாள் (24) அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.