பெரம்பலூர் : குன்னம் தொகுதி ஐஜேகே வேட்பாளர் ரகுபதி இன்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
பெரம்பலூர் – அரணாரையை சேர்ந்த ரகுபதி . இவர் இந்திய ஜனநாயக கட்சியில் இளைஞரணி மாவட்ட தலைவராக உள்ளார். இவரை குன்னம் தொகுதி ஐஜேகே வேட்பாளராக அக்கட்சி அறிவித்தது.
இதனையடுத்து ரகுபதி இன்று குன்னம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கள்ளபிரானிடம் வேட்பு மனுதாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக கார்த்திகேயன் வேட்பு மனுதாக்கல் செய்தார்.
நிகழ்ச்சியின் போது ஐஜேகே மாநில பொதுசெயலாளர் ஜெயசீலன், மாநில துணை தலைவர் ஜீவா, மாநில வக்கீல் அணி செயலாளர் அன்புதுரை, பிஜேபி மாவட்ட தலைவர் சந்திரசேகரன், அரணாரை ராமசாமி மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஷாஜஹான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து ஐஜேகே வேட்பாளர் ரகுபதியை ஆதரித்து மாநில பொதுசெயலாளர் ஜெயசீலன், மாநில துணை தலைவர் ஜீவா ஆகியோர் குன்னம் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தனர்.