பொதுமக்களிடம் சாதனை விளக்க கையேடுகள் அளிக்கிறார் மாவட்டச் செயலர் ஆர்.டி. ராமச்சந்திரன். உடன், மக்களவை உறுப்பினர்கள் ஆர்.பி. மருதராஜா, மா. சந்திரகாசி, சட்டப்பேரவை உறுப்பினர் இரா. தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள கோவில்பாளையம் கிராமத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க லட்சிய பேரணி இன்று நடந்தது.
சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மா. சந்திரகாசி, பெரம்பலூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் இரா. தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட செயலர் ஆர்.டி. ராமச்சந்திரன் அரசின் சாதனை விளக்க பேரணியை துவக்கி வைத்து துண்டறிக்கைகளை விநியோகம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து, அதிமுகவினர், கோவில்பாளையம் கிராமத்தில் வீடு, வீடாக சென்று வாக்காளர்களிடம் அதிமுக அரசின் சாதனை விளக்க கையேடுகளை வழங்கி வாக்கு சேகரித்தனர்.
இதில், ஒன்றிய செயலர்கள் ப. கிருஷ்ணசாமி, சிவப்பிரகாசம், மாவட்ட அணி செயலர் செல்வக்குமார், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலர் கார்த்திகேயன் உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.