பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள நன்னை கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி மகள் கவிதா(16), இவர் வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். கந்தசாமியின் டாடா ஏசி வண்டியை வேப்பூரை சேர்ந்த பாலுசாமி மகன் பாலசுப்ரமணியன்(21), என்பவர் ஓட்டி வந்தார்.
இந்நிலையில் கவிதாவும், டிரைவர் பாலசுப்ரமணியனும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் 3 மணி முதல் கவிதாவை காணவில்லை.
கவிதாவை டிரைவர் பாலசுப்ரமணியன் மற்றும் அவரது நண்பரும் சேர்ந்து கடத்தி
சென்று விட்டதாக கவிதாவின் அப்பா கந்தசாமி கொடுத்த புகாரின்பேரில்
குன்னம் போலீஸார் வழக்கு பதிவு செய்து கவிதா, பாலசுப்ரமணியன் உள்ளிட்ட
மூவரையும் தேடிவருகின்றனர்.