பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள அந்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் ராஜேந்திரன்(55), ராமசாமி(58) மாணிக்கம்(50) இவர்கள் மூவரும் அதே
ஊரிலுள்ள குளத்தங்கரையில் கீற்று கொட்டகையால் வேயப்பட்ட கொல்லம் பட்டறை வைத்து உள்ளனர்.
இந்நிலையின் இன்று அதிகாலை 3 மணி அளவில் அதே ஊரை சேர்ந்தவர் சந்திரபிரகாசம் இவரது மகன் திருமுருகன்(35) மன நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் இவர் கொல்லம் பட்டறைகளை தீ வைத்து கொளுத்தி விட்டதாக கூறப்படுகிறது.
இதில் ராஜேந்திரனுக்கு சொந்தமான பட்டறையில் வைக்கப்பட்ட 50ஆயிரம் மதிப்பிலான மர சாமான்கள் மற்றும் மொபட்டும் எரிந்து நாசமாயின. அதே போல் ராமசாமிக்கு சொந்தமான பட்டறையில் வைக்கப்பட்டு 50 ஆயிரம் மதிப்பிலான மரசான்களும் எரிந்து நாசமாயின. மாணிக்கத்திற்கு சொந்தமான பட்டறையில் ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியது.
இதுகுறித்து தகவலறிந்த வேப்பூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்து தீ மேலும் அக்கம்பக்கம் பரவாமல் தடுத்தனர்.
இத்தீவிபத்து குறித்து குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்து மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படும் திருமுருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.