பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் கல்லை கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் மனைவி கோமதி(35). இவருக்கும், குன்னம் கிராமத்தை சேர்ந்த
லெட்சுமணன் மனைவி பூங்கொடி(30) என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினையால் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பூங்கொடி, அவரது கணவர் லெட்சுமணன், உறவினர்களான சிவக்குமார், சிவா, ஆகியோர் உட்பட நான்கு பேரும்
கல்லை கிராமத்திற்கு சென்று கோமதி மற்றும் அவரது சகோதரர் முருகானந்தம்(32) ஆகிய இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த கோமதியும், அவரது சகோதரர் முருகானந்தமும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் சம்பவம் குறித்து குன்னம் காவல் நிலையத்தில் கோமதி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்த போலீசார், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட பூங்கொடி(30), அவரது கனவர் லெட்சுமணன்(39), உறவினர்களான சிவக்குமார்(34), சிவா(26) ஆகியோர் உட்பட நான்கு பேரையும்
இன்று கைது செய்தனர், பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.