பெரம்பலூர் மாவட்டம் லாடபுரத்தை சேர்ந்தவர் நடேசகுமார் லாரி டிரைவர் . இவருக்கும் கீழப்பெரம்பலூரை சேர்ந்த தொட்டியின் மகள் சுகன்யா (வயது 20) விற்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதில் இவர்களுக்கு சத்ரியன் என்ற மகன் உள்ளான். கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சுகன்யா தனது தாய்வீடான கீழப்பெரம்பலுருக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்பு வந்து தங்கி வசித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை சுகன்யா விஷம் குடித்தார்.
தகவலறிந்த அவரது உறவினர்கள் சுகன்யாவை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் சுகன்யா இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் குன்னம் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார். மேலும் திருமணமாகி 2 ஆண்டுகளில் சுகன்யா இறந்ததால் வரதட்சனை கொடுமை காரணமாக இறந்தாரா? என சார் ஆட்சியர் மதுசூதன் ரெட்டி விசாரணை நடத்தி வருகிறார்.