குன்னம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.டி.ராமச்சந்திரனை ஆதரித்து குன்னம் கிராமத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் அதிமுக கொள்கை பரப்பு மாநில துணைச்செயலளார் நாஞ்சில்.சம்பத் கலந்து கொண்டு பேசியதாவது :
5 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் பொது மக்கள் பயன் பெறும் வகையில் அம்மா திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் எடுத்து காட்டாக திகழ்கிறது. 20 ஆயிரம் கோடி மதிப்புள்ள சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசுடமையாக்கியவர் அம்மா, விட்டிருந்தால் அதனை கருணாநிதி வாங்கி இருப்பார் திமுகவிடம் அவ்வளவு பணம் இருக்கிறது. குன்னம் சட்டமன்ற தொகுதி மக்களுக்கு கனவுகளுக்கு அதிமுக வேட்பாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் திறவு கோளாக இருப்பார் அதனால் இவருக்கு இரணட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியாக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று கூறினார்.
அப்போது சிதம்பரம் தொகுதி எம்.பி சந்திரகாசி, வேப்பூர் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணசாமி, கீழப்புலியூர் முன்னாள் தலைவர் நடராஜன், குன்னம் குணசீலன் மற்றும் கட்சி பிரமுகர்கள் உள்பட ஏராளமான பெண்கள் கட்சியின் தொண்டர்கள் பெரும் திராளக கலந்து கொணடனர்.