பெரம்பலூர்: குன்னம் சட்ட மன்ற தொகுதிக்கு அதிமுக சார்பில் வேட்பாளராக ஆர்.டி.இராமச்சந்திரன் போட்டியிடுகிறார்.
அவர் இன்று காலை, வசிஸ்டபுரத்தில் கட்சியினருடன் வாக்கு சேகரிப்பை துவங்கினார்.
அங்கு அவர் பேசியதாவது: 5 ஆண்டு கால அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துரைத்து பேசினார். அம்மாவின் நலத்திட்டங்கள் தொடர்ந்திட அதிமுக சார்பில் போட்டியிடும் அவருக்கு அதிக அளவில் வாக்களித்து பெருவாரியான வாக்கு எண்ணிக்கையில் வெற்றி அடைய செய்ய வேண்டும் என கேட்டக் கொண்டார்.
பின்னர், பள்ள காளிங்கராய நல்லூர், மேட்டு காளிங்கராய நல்லூர் ரெட்டிக்குடிக்காடு வேள்வி மங்கலம், வீரமநல்லூர், வயலப்பாடி, கீரனூர், துங்கபுரம், கோவில்பாளையம் தேனூர், காரைப்பாடி, ஓலைப்பாடி, கல்லை, வேப்பூர், பரவாய் ஆகிய ஊர்களிலும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதிமுக கட்சி பிரமுகர்கள் பொதுமக்கள் பெரும் திராளக வாக்கு சேகரிப்பில் கலந்து கொண்டனர். வேட்பாளர் சென்ற இடமெல்லாம், பெண்கள் ஆரத்தி எடுத்தனர்.
கிராமங்கள்தோறும் வெடிகள் முழங்க சிறப்பான வரவேற்பும் அளித்தனர்.