பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில், குன்னம் தொகுதிக்கான திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா இன்று நடந்தது.
விழாவிற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, மதியழகன், ஞானமூர்த்தி, நகர செயலாளர் ஜாகீர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் மத்திய அமைச்சரும், மாநில கொள்கை பரப்பு செயலாளருமான ஆ.ராஜா தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் குன்னம் தொகுதியில் திமுக வெற்றிபெற மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் எம்எல்ஏ சிவசங்கர், மாநில நிர்வாகிகள் துரைசாமி, பெரியசாமி, பெருநற்கிள்ளி, பொதுக்குழுஉறுப்பினர் பட்டுசெல்வி, மாவட்ட அணி செயலாளர்கள் வக்கீல் செந்தில்நாதன், ஹரிபாஸ்கர்,
முருகேன், சன்சம்பத், மகாதேவி, மாவட்ட பொறுப்பாளர்கள் கரிகாலன், காட்டுராஜா, ரசூல்அகமது, டாக்டர் கருணாநிதி, முன்னாள் யூனியன் சேர்மன் முத்துக்கண்ணு உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் குன்னம் தொகுதி திமுக வேட்பாளர் வக்கீல் துரைராஜ் நன்றி தெரிவித்தார்.