பெரம்பலூர்: கரூரில் இன்று கூட்டத்தை முடித்து நள்ளிரவு பெரம்பலூர் வரும் மு.க. ஸ்டாலின் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர்ஆ.ராசாவின் அலுவலத்தில் தங்குகிறார்.
நாளை, குன்னம் தொகுதி திமுக வேட்பாளர் வழக்கறிஞர் துரைராஜை ஆதரித்து குன்னத்தில் நாளை காலை 9.30 – 11.00 வரை அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் செய்கிறார்.
முன்னதாக நாளை காலை 8.15 மணி முதல் 9.15 வரை கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். குன்னத்தில் பிரச்சாரம் 11 மணி முடிந்த பிறகு மதியம் உணவை பெரம்பலூரில் சாப்பிடும் அவர் மாலை திட்டக்குடி கட்சி நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள புறப்பட உள்ளார்.