பெரம்பலூர் குன்னம் சட்டமன்ற தொகுதியில் தே.மு.தி.க.-த.மா.கா.-மக்கள் நலக்கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளரும் வேட்பாளருமாகிய முகம்மது நவாஸ் பெரம்பலூர் அருகே உள்ள மலையப்பநகரில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
குன்னம் சட்டமன்ற தொகுதி பின்தங்கிய நிலையில் உள்ளது. இங்கு ஓரரு கல்லூரி தவிர வேறு கல்லூரிகள் இல்லை. கிராமங்களில் அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவியர்களும் தனியார் கல்வி நிறுவனங்களை நோக்கி படை எடுக்கும் நிலை ஏற்பட்டுவருகிறது.
அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் இருந்தும் கல்வி சரிவர போதிக்கப்படவில்லை. அரசு பள்ளிகள் தரமற்று இயங்கிவருகிறது இந்த தொகுதியில் கல்வி, கட்டமைப்பு வசதிகள்,வேலைவாய்ப்பிற்கு தொழிற்கூடங்கள் இல்லை.
விவசாயிகளும் எவ்வித வசதிகளும் இன்றி அடித்தள மட்டத்திலேயே வாழ்ந்து வருகின்றனர். எனவே இந்த தொகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த விசிக வேட்பாளராகிய முகம்மது நவாஸ மோதிரம் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் சிபிஐ மாவட்ட செயலாளர் வீ.ஞானசேகரன், சிபிஎம் மாவட்டக் குழு பி.ரமேஷ், விசிக பொருப்பாளர்கள் தங்கதுரை, மாநில துணை செயலாளர் வீர.செங்கோலன், மாவட்ட செயலாளர் சி.தமிழ்மாணிக்கம், மாவட்ட பொருளாளர் கலையரசன், வழக்கறிஞர் இரா.ஸ்டாலின், தேமுதிக ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் பொன்.சாமிதுரை, மற்றும் விசிக பிரமுகர்கள் மெய்யன், மன்னர்மன்னன், இளமாறன், தமாக பொருப்பாளர்கள் செல்வகுமார் வரகுபாடி ராஜேந்திரன், காரை சுப்ரமணியன், உள்பட ஏராளமானோர் உடன் சென்றனர்.