பெரம்பலூர் : குன்னம் வட்டாச்சியார் தெரிவித்துள்ளதாவது :

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்தில் காலியாக உள்ள 3 கிராம உதவியாளர்கள் பணியிடங்களுக்கு வரும் செப்.28 அன்று காலை 11.00 மணியளவில் குன்னம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற உள்ளது.

மேற்கண்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியுடைய கீழ்கண்ட நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

அரசு பள்ளி அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 5-ம் வகுப்பபு படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

21 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்குட்பட்டவராகவும், அட்டவணை வகுப்பினர், மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர், சீர் மரபினர் 35 வயதுக்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். மிதி வண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

நன்னடத்தைச்சான்று மற்றும் உடற்தகுதி சான்று சமர்ப்பிக்க வேண்டும். வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

அசல் சான்று ஆவணங்கள் மற்றும் 2 சான்றொப்பம் இடப்பட்ட நகல்களுடன் நேர்காணலில் பங்கேற்கலாம் என குன்னம் வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!