பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்தில் 41 ஆயிரத்து 434 பேருக்கு வேஷ்டி சேலை வழங்கும் பணியை சந்திரகாசி எம்.பி துவக்கி வைத்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி சேலை வழங்கும் விழா குன்னம் கிராம நிர்வாக அலுவலகம் அருகிலுள்ள ரேஷன் கடையில் நடைபெற்றது.
விழாவிற்கு குன்னம் தாசில்தார் ஷாஜகான் தலைமை வகித்தார், விழாவில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் சந்திரகாசி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து பேசியதாவது குன்னம் வட்டத்தில் 40592 பேருக்கு வேட்டியும் 41434 பேருக்கு சேலையும் வழங்கப்பட உள்ளது. கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் டோக்கன் வழங்கப்பட்டு ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என இவ்வாறு பேசினார்.
குன்னம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் குணசீலன், குன்னம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் ஏ.கே. ராஜேந்திரன் ஒன்றிய குழு உறுப்பினர் அமுதா முருகேசன், ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோவன் துணை தலைவர் முத்துலட்சுமி ராஜா, கிராம நிர்வாக அலுவலர் அழகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக வருவாய் ஆய்வாளர் பத்மாவதி வரவேற்றார் முடிவில் தனி வருவாய் ஆய்வாளர் குமரி ஆனந்தன் நன்றி கூறினார்.
விழாவில் குன்னம் கிராமத்தில் உள்ள 1140 பேருக்கு விலையில்லா வேட்டி சேலை வழங்கப் பட்டது.